நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ தைப்பூச விழாவில் 5,69,261 ரிங்கிட் வசூல்: சீத்தாராமன்

 ஈப்போ:

பேரா மாநிலத்தில் உள்ள கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவில் இந்த ஆண்டு 5,69,261 ரிங்கிட் வசூலானது.

இதை ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் ஆர். சீத்தாராமன் கூறினார்.

பல்வேறு சரச்சையில் இருந்து மீண்ட ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா இந்த ஆண்டு மிகவும் சிறப்பான முறையில் தைப்பூச விழாவை நடத்தி முடித்தது .

இவ்விழா சிறப்பான முறையில் நடைபெற மாநில அரசாங்கம் குறிப்பாக அதன் அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன், பொது மக்கள் வழங்கிய பேராதரவுக்கு சீத்தாராமன் நன்றியைக் கூறிக் கொண்டார்.

ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் மூலம்  அதிகமான நிதி கிடைத்ததாகவும் அதன் மூலம்  1 லட்சது  30 ஆயிரத்து 400 ரிங்கிட்  வசூலானது.

முடி காணிக்கை, பாலபிஷேகம் , தேங்காய் அர்ச்சனை வழி அதிகமான நிதி வசூலானதாக தெரிவித்தார்.

இன்று காலையில் பேரா மாநில அரசாங்க செயலகத்தில் சிவநேசனை சந்தித்த ஈப்போ இந்து தேவஸ்தான சபா நிர்வாக உறுப்பினர்கள் பின்னர்  சிவநேசன் முன்னிலையில் இந்த தகவலை செய்தியாளர்களிடம் சீத்தாராமன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவநேசன், பல சிக்கலில் இருந்து மீண்ட ஈப்போ இந்து தேவஸ்தானம் தொடர்ந்து எந்த பிரச்னையிலும் சிக்காமல்  முறையே நிர்வாகத்தை வழி நடத்தும்படி ஆலோசனை கூறினார்

பேரா மாநிலத்தில்  செயல்படுகின்ற ஆலயங்கள் அதன்  நிர்வாகத்தை சிறப்பான முறையில்  நடத்த வேண்டும்.

சில ஆலயங்கள் சங்கங்களின் பதிவு இலாகாவிற்கு  முறையே கணக்கு வழக்குகளை தக்கல் செய்யாததால் அதன் பதிவை ரத்து செய்யப்படும் நிலையில் உள்ளது கவலை அளிப்பதாகவும் குறிபிட்டார்.

ஆகவே ஆலயங்கள் அதன் விதிகளை முறைப்படி கடைப்பிடிக்கவேண்டும், சிவநேசன் கேட்டுக்கொண்டார்.

மேலும் , இந்த நாட்டு ருக்குன் நெகரா கோட்பாட்டிற்கு புறம்பாக செயல்படும் குறிப்பாக மதங்களுக்கு புறம்பாக செயல்படும்  அமைப்புகளுக்கு அரசாங்க நிதி வழங்கப்படாது என்ற தகவலையும் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset