
செய்திகள் மலேசியா
இந்தியர்களின் விவகாரங்களை கவனிக்க மித்ராவின் கீழ் சிறப்பு பிரிவுகள்: பிரபாகரன்
கோலாலம்பூர்:
இந்தியர்களின் விவகாரங்களை கவனிக்க மித்ராவின் கீழ் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும் என்று அதன் சிறப்பு பணிக் குழு தலைவர் பி. பிரபாகரன் கூறினார்.
மித்ரா என்றாலே ஊழல், முறைகேடு என்ற நிலையாகி விட்டது. இந்த அவல பார்வையில் இருந்து மித்ராவை மீட்டெடுக்க வேண்டும். இது தான் எனது முதல் கட்ட நடவடிக்கையாகும்.
அதனைத் தொடர்ந்து மித்ரா பணிக் குழுவில் பலர் இடம் பெற்றிருந்தனர்.
அவர்களின் பணி தொடர்கிறதா அல்லது புதியவர்கள் நியமிக்கப்படுவார்களா என்பதை உறுதி செய்ய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மேலும் இந்திய சமுதாய உருமாற்ற திட்டங்களை மேற்கொள்வது தான் மித்ராவின் முக்கிய இலக்காகும்.
அதனால் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை மித்ராவால் கண்காணிக்க முடியாது.
ஆனால் என் தலைமையில் மித்ராவின் கீழ் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும்.
இதன் வாயிலாக இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் கல்வி, பொருளாதாரம், தமிழப்பள்ளி, அடையாள அட்டை, வேலை வாய்ப்பு ஆகிய பிரச்சினைகளையும் கண்காணிக்கும்.
இதுபோன்ற இலக்குகளை அடைய சமுதாய தலைவர்களும், மக்களும் எனக்கு ஒத்துழைப்பை தர வேண்டும் என்று பிரபாகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2025, 12:01 pm
கால்பந்துத் துறையில் அனுபவம் வாய்ந்த கிறிஸ்டபர் ராஜ் டத்தோ விருதை பெற்றார்
July 27, 2025, 11:42 am
மீண்டும் ஏமாற்றப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் மஇகா விரும்பவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
July 27, 2025, 10:50 am