நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலை பகடிவதை: சிங்கப்பூர் காரின் உரிமையாளரைத் தேடும் ஜொகூர் போலீஸ்

ஜொகூர் போலீஸ்

ஜொகூர்பாரு:

சாலையில் ஒரு காரின் கண்ணாடியை உடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் பதிவு எண்ணைக் கொண்ட காரின் ஓட்டுநரை ஜொகூர் மாநிலக் போலீஸ்படையினர் தேடி வருகின்றனர்.

மலேசியாவின் வடக்கு-கிழக்கு விரைவுச்சாலையில் வடக்கே சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. 

கடந்த சனிக்கிழமை  நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்டதாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் எம். குமார் தெரிவித்தார். 

இச் சம்பவம் பதிவானதாகக் கருதப்படும் 54 வினாடிக் காணொலியை முகநூல் பயனர் ஒருவர் பகிர்ந்துகொண்டார். 

அந்தக் காணொலி குறைந்தது 26,000 முறை பார்க்கப்பட்டது, 3,000 முறை பகிரப்பட்டது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset