நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதரசா ரஷிதியாவின் அடிக்கல் நாட்டு விழா: பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் 10,000 ரிங்கிட் நன்கொடை வழங்கினார்

கோலாலம்பூர்: 

இன்று தலைநகர் பத்து மூடா தொகுதியில் மதரசா ரஷிதியாவின் அடிக்கல் நாட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டத்தோ ஜவஹர் அலி தலைமை தாங்கினார். 

இந்த மதரசா தளம் ஜாலான் பெலாங்கி 11, ஜாலான் பத்து மூடா வில் அமைந்துள்ளது. 

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் இஸ்லாமிய சமய விவகாரத்துறையான ஜாக்கிமின் துணை இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் டத்தோ ஹாஜி முஹம்மத் அஜீப் பின்  இஸ்மாயில்  சிறப்பு வருகை மேற்கொண்டு அடிக்கல் விழாவில் கலந்து கொண்டார்.

மதரசா கட்டிட நிதியாக பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் 10,000 ரிங்கிட் நன்கொடை வழங்கினார். அவர் தனது சிறப்புரையில் எனது தொகுதிக்குட்பட்ட இந்த மதரசா கட்டி எழுப்ப முயன்று வரும் டாக்டர் அப்துல் சலீம், ஆலோசகர் டத்தோ ஜவஹர் அலி ஆகியோருக்கும் மாவிப் சமய இலாகாவிற்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னாலான அனைத்து உதவிகளையும் நான் செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று அவர் கூறினார்.

கட்டிடக்குழுத்தலைவரான டாக்டர் அப்துல் சலீம் கூறுகையில் இந்தப் பகுதியில் இங்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தொழுகைகூடத்துடன் கூடிய மதரஸா தேவை என்று நாங்கள் உணர்ந்தோம். உரிய ஆலோசனைகளை டத்தோ ஜவஹர் அலி அவர்கள் வழங்கினார். 

மாவிப் இந்த நிலத்தை எங்களுக்கு ஒதுக்கித் தந்து 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. ஓராண்டு பூர்த்தியாகிவிட்டது. இப்போது அடிக்கல் நாட்டி இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை கட்டி முடிக்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறோம். 

இதற்கான மொத்த பட்ஜெட் ஏறக்குறைய 1.2 மில்லியன் என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார். இன்ஷா அல்லாஹ் நம்மால் இதனை செய்து முடிக்க முடியும். இறைவனுடைய இல்லம் இது. அனைவரும் தாராளமாக கொடுத்து உதவ வேண்டும் என்று கூறி தனது பங்காக 10,000 ரிங்கிட்டை அவர் வழங்கினார்.

டத்தோ ஸ்ரீ அப்துல் சலீம் பின் ஹாஜி முஹம்மது ஜக்கில் 20,000 ரிங்கிட் வழங்கினார்.

இறை இல்லக் கொடைவள்ளல் ஹாஜி மெட்ரோ காதிர் முதல் கட்டமாக 10,000 வெள்ளி தருவதாக கூறினார். எஸ் எம் எஸ் தீன் ஜூவல்லர்ஸ் சார்பில் 10,000 ரிங்கிட்டும் டத்தோ வீரா நைனா முஹம்மது 10,000 ரிங்கிட்டும் துவான் சப்ரி 10,000 ரிங்கிட்டும் வழங்கப்பட்டது. 

மதராசாவின் தலைவர் அப்துல் சலீம் 50,000 ரிங்கிட்டும் துவான் முஹம்மது ஆவ்தம் 50,000 ரிங்கிட்டும் இன்று நன்கொடை வழங்கினார்கள். இன்றுமட்டும் ஏறக்குறைய 200,000 ரிங்கிட் வசூலானது.

நன்கொடை வழங்க விரும்புபவர்கள் மதரசா தலைவர் Dr Hj Abdul Saleem+60 12-786 7863 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset