நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்க திட்டங்களை தெளிவுப்படுத்த எளிய மொழியைப் பயன்படுத்துங்கள்: ஃபஹ்மி

சைபர்ஜெயா:

அரசாங்கத்தின் திட்டங்களை தெளிவுப்படுத்த எளிய மொழியைப் பயன்படுத்துங்கள்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை வலியுறுத்தினார்.

அரசாங்கக் கொள்கைகள், திட்டங்களை விளக்க குறிப்பாக முகநூல், டிக்டாக், வாட்ஸ்அப் மூலம் அதிக தகவல்களைப் பெறும் 18 முதல் 35 வயதுடைய குழுவிற்கு எளிமையான மொழியைப் பயன்படுத்துவது அவசியமாகும்.

அரசாங்க உதவி உட்பட அனைத்து தகவல்களும் தெளிவாகவும், துல்லியமாகவும், மக்களால் எளிதில் புரிந்துகொள்ளப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.

இதற்கு அரசாங்க தகவல் தொடர்புகளை வலுப்படுத்த அமைச்சும் தொடர்ந்து பாடுபடும்.

இந்தக் குழுவில் கிட்டத்தட்ட பாதி வாக்காளர்கள் இருப்பது மட்டுமல்லாமல், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், சேவைகளின் முக்கிய பயனீட்டாளர்களாகவும் உள்ளனர்.

இது சம்பந்தமாக அரசாங்கமும் தகவல் இயந்திரங்களும் பழைய அணுகுமுறைகளையோ அல்லது உள்ளடக்கத்தை மீண்டும் பகிர்வதையோ நம்பாமல், இன்னும் முன்னோக்கி செயல்பட தயாராக இருக்க நினைவூட்டப்படுகின்றன.

சைபர்ஜெயாவில் உள்ள தகவல் துறை ஊழியர்களிடம் உரை வழங்கும்போது அவர் இவ்வாறு  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset