நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியைவிட்டு வெளியேறும் எண்ணம் மசீசவுக்கு இல்லை: வீ கா சியோங்

கோலாலம்பூர்:

தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் எண்ணம் மசீசவுக்கு இல்லை.

மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் இதனை கூறினார்.

தேசிய முன்னணியில் ஒரு உறுப்பு கட்சியாக மசீச அப்படியே இருக்கும். மேலும் எங்களுக்கிடையில் எந்தவித மோதல்களும் இருக்காது.

தேசிய முன்னணியின் இணை நிறுவனர் என்ற முறையில் மசீச வலுவான, அசைக்க முடியாத கூட்டணி உணர்வைக் கொண்டுள்ளது.

இது தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவது என்ற கேள்விக்கே இடமில்லை.

நேற்று நடைபெற்ற அம்னோ 2025 பொதுப் பேரவையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது டத்தோஸ்ரீ வீ கா சியோங் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset