நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொங்கல் விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது: குணராஜ்

கிள்ளான்:

பொங்கல் விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்.

செந்தோசா சட்டமன்ற தொகுதி மக்கள் சேவை மையத்துடன் இணைந்து நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பொங்கல் விழாவை நடத்தினர்.

பண்டார் செந்தோசாவில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா சுற்று வட்டாரத்தில் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

குறிப்பாக பல்லினங்களைச் சேர்ந்த மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு இதுபோன்ற பொங்கல் விழாக்கள் முக்கிய காரணமாக உள்ளது.

ஆக பொங்கல் விழாக்கள் பரவலாக நடத்தப்பட வேண்டும்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset