நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாஹித் ஹமிதியின் ‘ரூமா பங்சா’ யோசனைக்கு அம்னோ வரவேற்பு

கோலாலம்பூர்:

தற்போதைய அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை கருத்தில் கொண்டு, ‘ரூமா பங்சா’ (Rumah Bangsa) ஒன்றிணைப்பு குழுவை அமைப்பதன் மூலம், பிற இனங்களின் உரிமைகளைப் புறக்கணிக்காமல் மலாய் மக்களின் நலன்களை உறுதியாகக் காக்கும் ஒரே அரசியல் கட்சியாக அம்னோ மீண்டும் தன்னை நிலைநிறுத்த உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்னோவின் உயர் செயற்குழு உறுப்பினரான டத்துக் ஸ்ரீ ஷம்சுல் அனுவார் நாசரா, மலாய் மக்களுக்கான ஏற்ற அரசியல் கட்சியாக அம்னோ தொடர்ந்து பொருத்தமானதாக (relevant) இருக்க, கட்சியின் அணுகுமுறை, உத்திகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றார்.

“டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி தாமே, அம்னோ மலாய் மக்களை முழுமையாகப்  பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என வலியுறுத்தினார்.

“அதனால்தான், இன்று முன்வைக்கப்பட்ட ‘ரூமா பங்சா’ என்ற யோசனை மிகவும் சிறந்ததாக உள்ளது. அம்னோவிலிருந்தே பிரிந்து, சிதறிக் கிடக்கும் மலாய் மக்களை மீண்டும் ஒன்றிணைக்க, தலைவர், அம்னோ காட்டும் அக்கறையும் நேர்மையும் இதில் வெளிப்படுகிறது,” என அவர், நடைபெற்ற அம்னோ பொதுச் சபையின் தலைவர் கொள்கை உரைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்காக சிறப்பு குழு அமைக்கப்படவுள்ளதாகவும், அதே நேரத்தில் அனைத்து இனங்களின் நலன்களையும் காக்கும் உறுதியை அம்னோ தொடர்ந்து பேணும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், டத்தோ ஸ்ரீ அஹ்மத் மஸ்லான், ‘ரூமா பங்சா’ அமைப்பை நிறுவுவது தொடர்பான தேசிய ஆலோசனை (Musyawarah Nasional) விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம், மலாய் மக்கள் அம்னோவின்கீழ் மீண்டும் ஒன்றிணைவார்கள் என்றார்.

“மலாய் மக்கள் இந்த அம்னோவின் ‘ரூமா பங்சா’ கீழ் மீண்டும் இணைய இந்த திட்டம்  விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் 2026 ஆண்டுக்கான சிறந்த தொடக்கமாகவும் இது அமையும்,” என்றார் அவர்.

முன்னதாக, அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் அரசியல் கட்சிகளைக்  கடந்து மலாய் மக்களை ஒன்றிணைக்கும் மேடையாக‘ரூமா பங்சா’ என்ற கருத்தை முன்வைத்திருந்தார். இதில், முன்னாள் அம்னோ தலைவர்கள், உறுப்பினர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, ஒன்றிணைவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset