நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா, மசீச முகம் சுளிப்பதை நிறுத்திவிட்டு தேசிய முன்னணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும்: ஜாஹித்

கோலாலம்பூர்:

மஇகா, மசீச முகம் சுளிப்பதை நிறுத்திவிட்டு தேசிய முன்னணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

தேசிய முன்னணி, அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

தேசிய நலனுக்காக ஒற்றுமை அரசாங்கத்தில் சேர தேசிய முன்னணி எடுத்த முடிவு அதன் உறுப்பு கட்சிகளுக்கு இடையேயான உறவுகளை சீர்குலைத்துள்ளது.

சிலர் கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், மற்றவர்கள் வெறுப்படைந்து வேறு இடங்களுக்குச் செல்வது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.

79ஆவது அம்னோ பொதுச் சபையின் தொடக்கத்தில் மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவருடைய தலைமை உரையின்போது பார்ட்டி பெர்சத்து ராக்யாட் சபா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆர்தர் ஜோசப் குருப் அவர்களும் உடனிருந்தார்.

துணைப் பிரதமராக இருக்கும் டத்தோஸ்ரீ ஜாஹித், பின்னர் "செடாங்கன் லிடா லாகி டெர்கிகிட்" என்ற மலாய் மொழியை மேற்கோள் காட்டினார்.

இது நெருக்கமானவர்களிடையே உள்ள சச்சரவுகளைக் குறிக்கிறது.

தேசிய முன்னணியை விட்டு யாரும் வெளியேற வேண்டாம். ஒருவரையொருவர் அரவணைத்து ஒற்றுமையாக  இருப்போம்.

ஆனால் தயவுசெய்து தொடர்ந்து முகம் சுளிக்க வேண்டாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset