நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெற்றி மடானி திட்டம் இந்திய சமுதாயத்தை மேம்படுத்துவதுடன் உருமாற்றும்: டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கை

சுங்கைபூலோ:

வெற்றி மடானி திட்டம் இந்திய சமுதாயத்தை மேம்படுத்துவதுடன் உருமாற்றும்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்த நம்பிக்கையை தெரிவித்தார். 
 
13ஆவது மலேசியத் திட்டத்தின்  குறிப்பிடத்தக்க இலக்குகளுக்கு இணங்கவும், மனிதவள அமைச்சின் நோக்கங்களுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இந்த வெற்றி மடானி திட்டம் அறிமுகமாகிறது.

சுங்கை பூலோ, ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய அளவில் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இத்திட்டம் தொடக்கம் காண்கிறது.

வெற்றி மடானி திறன் மேம்பாட்டுத் திட்டm வெற்றிகரமான ஓர் அறுவடை காலத்தின் நிறைவிற்கு இணையானது.

வெற்றி  என்பது மலேசிய இந்தியர்களுக்குத் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.

மேலும் அவர்கள் வாழ்வில் உயர்வதற்கும் சரியான வாய்ப்புகளை வழங்குவதற்கான மனிதவள அமைச்சின்  உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. 

இந்த ஆக்கப்பூர்வமான திட்டத்தின் மூலம், சமநிலை வளர்ச்சி நிலையான பணியாளர் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் உன்னதமான வாய்ப்புகளை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

மலேசிய இந்திய சமூகத்திற்கு வருங்காலத்திற்குத் தேவையான நவீனத் திறன்களை வழங்குவதன் மூலம், அவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும், சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும், தேசியப் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரியவும் இத்திட்டம் வழிவகுக்கிறது. 
இது சமநிலை திறமை மேம்பாட்டிற்கான எச்ஆர்டி கோர்ப்பின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.

தொழிற்துறைத் தேவைகளுக்கு ஏற்ப, முறையான பயிற்சித் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழிகளை உருவாக்குவதன் மூலம் உள்ளூர் இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக வெற்றி மடானி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு,  இயந்திரக் கற்றல்,  இணையப் பாதுகாப்பு, தரவு அறிவியல், தானியங்கி முறை, ரோபோட்டிக்ஸ், ஐஆர் 4.0, செமிகண்டக்டர் போன்ற அதிநவீன, அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும்.

இத்திட்டத்திற்காக எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் நாடு முழுவதும் 2,000 பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்குவதன் மூலம் பங்கேற்பாளர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டம் நாடு முழுவதும் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்ய எச்ஆர்டி கோர்ப் மாநில திறன் மேம்பாட்டு மையங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.

ஆக மொத்தத்தில் இத்திட்டம் இந்திய சமுதாயத்தை உருமாற்றும் என்று  டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

முன்னதாக மடானி அரசாங்கத்தின் இலக்கிற்கு ஏற்ப, இந்திய சமூகத்தின் திறன்களை மேம்படுத்தி, எதிர்காலத்திற்குத் தயாரான மலேசியாவை உருவாக்கும் நோக்கில் இந்த வெற்றி மடானி திட்டம் செயல்படும் என்று  எச்ஆர்டி கோர்ப் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சையத் அல்வி பின் முஹம்மத் சுல்தான் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset