நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபூலோவில் 1,000 பள்ளி மாணவர்களுக்கு உதவி; கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை: டத்தோஶ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதியில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும்.

மனிதவள அமைச்சரும் சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

சுங்கைப்பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் கிட்டத்தட்ட 1,000 மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்களும் உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கான இந்த உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று சுங்கைப்பூலோவில் நடைபெற்றது.

அமானா இக்தியார் உறுப்பினர்களின் கிட்டத்தட்ட 250 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அதே வேளையில் சுங்கைபூலோ தொகுதி வாக்காளர்களின் பிள்ளைகளான 750 பேருக்கு 150 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்பட்டது.

இத்தொகையை கொண்டு மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் அல்லது கல்விக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மொத்தம் 112,500 ரிங்கிட் மதிப்பிலான உதவிகள் இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

பள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகளை கொண்டிருக்கும் பெற்றோர்களின் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த உதவிகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

வரும் ஆண்டுகளிலும் இதுபோன்ற திட்டங்கள் தொடரும்.

மேலும் இத்தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு தொடர்ந்து கவனம் செலுத்தப்படும்  என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

முன்னதாக அமானா இக்தியார் தலைமை இயக்குநர் டத்தோ ஷமிர் அஜிஸ் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset