நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை மலாய் அரசியல்வாதிகள் பாதுகாக்க வேண்டும்: ஜைட்

கோலாலம்பூர்:

கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை மலாய் அரசியல்வாதிகள் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஜைட் இப்ராஹிம் கூறினார்.

வழக்கறிஞர் நிக் எலின் ஜூரினா நிக் அப்துல் ரஷித், அவரது மகள் டெங்கு யாஸ்மின் நஸ்டாஷா தெங்கு அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக பல எதிர்வினை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது நல்லதல்ல.

மற்ற நாடுகளை போன்று மலேசியாவிலும் ஜனநாயகம் காக்கப்படுகிறது.

குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட சட்டங்களின் வாயிலாக நாம் ஆளப்படுகிறோம்.

மலாய் அரசியல்வாதிகள் உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல மலேசியாவை அப்படியே வைத்திருக்க விரும்ப வேண்டும்.

அப்படியென்றால் அவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.

ஆனால் அவர்களின் எதிர்வினைகள் உணர்ச்சிகரமானவை, உண்மையில் அவை அடித்தளமாக இல்லை என்றார் அவர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset