செய்திகள் மலேசியா
மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்
மலாக்கா:
சனிக்கிழமை அதிகாலை, ஜாலான் தம்பாக் பாயா பகுதியில், மூன்று மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்தனர்.
அதிகாலை 3.50 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களான முஹம்மத் அடிஃப் ஃபரிஹின் முகமது அனுவார், வயது15, முஹம்மத் அஸ்மி அப்துல் ரஹிமா, வயது 16, ஒரு பயணியான நூர் கைரியா மாட் மஸ்லின், வயது 16 ஆவர்.
மேலும், மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான முஹம்மத் ஹாசிக் ஹைக்கல் காசிம் (18) கடுமையாக காயமடைந்து, தற்போது மலாக்கா மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் (Zon Merah) சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமரா (CCTV), டாஷ்கேம் பதிவு அல்லது சுயாதீன சாட்சிகள் எவரும் கிடைக்கவில்லை என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலிஸ் தலைவர், உதவி ஆணையர் கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.
இந்த வழக்கு, சாலைப் போக்குவரத்து சட்டம் 1987, பிரிவு 41(1)ன் கீழ், கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணம் ஏற்படுத்திய குற்றமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 28, 2026, 2:47 pm
வான்வெளியில் ஆபத்து அதிகரித்ததால் மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பி விடப்பட்டன
February 28, 2026, 1:25 pm
டிக்டாக் நட்பு கொடூரமாக மாறியது: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டு சிறை
February 28, 2026, 12:32 pm
ரமலான் உதவிகள் சமூக கடப்பாட்டை தாண்டி சமுதாய மக்களை ஒன்றிணைக்கிறது: டத்தோ அப்துல் ஹமித்
February 28, 2026, 12:20 pm
6.15 சதவீத ஈவுத் தொகையை ஈபிஎப் அறிவித்தது
February 28, 2026, 12:00 pm
மாணவர் இஸ்லாத்தை அவமதித்த விவகாரம்; விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டுள்ளன: போலிஸ்
February 28, 2026, 11:36 am
