செய்திகள் மலேசியா
புக்கிட் அமான் போலீஸ் அதிகாரி விபத்தில் உயிரிழந்தார்
கோலாலம்பூர்:
தாமான் மிடா பகுதியிலிருந்து தாமான் கன்னாட் நோக்கிச் செல்லும் ஜாலான் செராஸ் சாலையில், மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய ஒரு போலிஸ் அதிகாரி உயிரிழந்தார்.
34 வயதுடைய அந்த ஆடவர் புக்கிட் அமான் தேசிய போலீஸ் தலைமை அலுவலகத்தின் பணியாளராகப் பணியாற்றி வந்தவர் ஆவார்.
இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 2.06 மணிக்கு தமது தரப்புக்கு தகவல் கிடைத்ததாகக் கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறை (JSPT) தலைவர், உதவி ஆணையர் முஹம்மத் ஜம்ஸுரி முஹம்மத் இசா தெரிவித்தார்.
“முதற்கட்ட விசாரணையில், போக்குவரத்து நெரிசலான நிலையில் பாதிக்கப்பட்டவர் நேராக பயணித்துக் கொண்டிருந்தார். இரண்டு வழித்தடங்களுக்கு இடையில் சென்று கொண்டிருந்தபோது, முன்புறத்தில் சென்ற ஒரு வாகனம் திடீரென பிரேக் வைத்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கருதப்படுகிறது,” என்றார் அவர்.
அந்தத் திடீர் பிரேக் காரணமாக பாதிக்கப்பட்டவர் கட்டுப்பாட்டை இழந்து இடது வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த லாரியின் கீழ் சிக்கினார்.
இதன் விளைவாக, அவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிபர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனை UKM மருத்துவ அதிகாரிகளால் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
“45 வயதுடைய லாரி ஓட்டுநர் எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பினார். விசாரணைக்கு உதவுவதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"இந்த வழக்கு, சாலைப் போக்குவரத்து சட்டம் 1987, பிரிவு 41(1)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தச் சம்பவம் குறித்து தகவல் கொண்ட பொதுமக்கள் அல்லது சாட்சிகள், 03-2071 9999 என்ற எண்ணில் போக்குவரத்து காவல் நிலையம் துன் எச் எஸ் லீ அல்லது அருகிலுள்ள எந்த போலிஸ் நிலையத்தையாவது தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 28, 2026, 8:28 pm
நாட்டின் தேசிய ஹாக்கி வீரர் ஆர்.ராமகிருஷ்ணன் காலமானார்
February 28, 2026, 8:02 pm
உள்ளூர் ஓவியக் கலைஞர்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 28, 2026, 4:53 pm
நோன்பாளிகளின் சேவையில் குறைபாடு: TTDI அத்-தக்வா பள்ளிவாசல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது
February 28, 2026, 4:47 pm
சிலாங்கூர் மாநில 72,850 அரசு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகை அறிவிப்பு
February 28, 2026, 2:47 pm
வான்வெளியில் ஆபத்து அதிகரித்ததால் மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பி விடப்பட்டன
February 28, 2026, 1:30 pm
மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்
February 28, 2026, 1:25 pm
