நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா–தாய்லாந்து எல்லையில் பணிபுரியும் அதிகாரிகளுக்குத் துப்பாக்கி, குண்டுத் துளைக்காத உடை வழங்கப்படும்: KPDN துணை அமைச்சர் ஃபுசியா சாலே

கோத்தாபாரு: 

உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவீன அமைச்சகம் (KPDN), மலேசியா–தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் பணிபுரியும் சில அதிகாரிகள், உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அவர்களுக்கு துப்பாக்கி, குண்டுத் துளைக்காத உடைகளை வழங்கியுள்ளது.

 இந்த உபகரணங்கள் குறிப்பாக அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.

“இந்த நடவடிக்கை முன்பு எல்லைப் பகுதிகளில் நடந்த சில சம்பவங்களின் தொடர்ச்சியாக, அதிகாரிகள், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லைப் பகுதிகளில் பணிபுரியும் அதிகாரிகள் அச்சமின்றி, பாதுகாப்பான சூழலில் தங்கள் கடமைகளை நிறைவேற்ற உதவும் என்றும் அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset