செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநில 72,850 அரசு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகை அறிவிப்பு
ஷா அலாம்:
இந்த ஆண்டின் நோன்புப் பெருநாளான ஹரிராயா பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ‘Insentif Khas Kita Selangor Aidilfitri (IKSA)’ என்ற சிறப்பு ஊக்கத்தொகையாக ஒரு மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் RM1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத்தொகை வரும் மார்ச் 19ஆம் தேதி வழங்கப்படும் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
“அரசு ஊழியர்கள் வெளிப்படுத்திய சிறப்பான சேவையைப் பாராட்டுவதற்காகவும், இந்த ஆண்டு முழுவதும் மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கமளிப்பதற்காகவும், அனைவருக்கும் ஒரு மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் RM1,000 வழங்க மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது,” என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து, கிராம சமூக மேலாண்மை குழு (MPKK), புதிய கிராம/பாகான் தொடர்பு அதிகாரிகள், இந்திய சமூக தலைவர்கள், பெண்கள் மேம்பாட்டு மேற்பார்வையாளர்கள் (PWB), சிலாங்கூர் இளைஞர் இயக்குனர்கள் (PeBS) என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்த சமூக தலைவர்களுக்கு ஒரு மாத உதவித்தொகை அல்லது குறைந்தபட்சம் RM500 வழங்கப்படும் என்றும் அமிருதின் அறிவித்தார்.
மேலும், பள்ளிவாசல் பணியாளர்கள், ‘Guru Rakyat’ ஆசிரியர்கள் RM500 ஊக்கத்தொகை பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
“RM3,000 அல்லது அதற்கு குறைவான சம்பளம் பெறும் சிலாங்கூரில் நிரந்தரமாக பணியாற்றும் 50,000 மத்திய அரசு ஊழியர்களுக்கு RM300 வழங்கப்படும். இது மாநில–மத்திய உறவை வலுப்படுத்தும் முயற்சியாகும்,” என்றார் அவர்.
மொத்தமாக, இந்த உதவித் திட்டம் 72,850 அரசு ஊழியர்களுக்குப் பயனளிக்கும் என்றும், இதற்கான நிதி RM66.25 மில்லியன் என்றும் அவர் கூறினார்.
“இந்த IKSA உதவி, உங்கள் குடும்பத்தினருடன் ஹரிராயாவைச் சிறப்பாகக் கொண்டாட உதவும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில், மக்களுக்கு சிறந்த சேவை வழங்க நாம் அனைவரும் உறுதியேற்போம்,” என்றார் அவர்.
இதற்கிடையில், அரசு ஊழியர்களின் சம்பளம் ஹரிராயாவிற்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு மார்ச் 13ஆம் தேதியே வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
“இந்த முடிவு, அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்திற்கான தயாரிப்புகளைச் செய்ய வசதியாக இருக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
மேலும், 2025 நவம்பரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட சிலாங்கூர் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் சங்கம்(WAJAR) அமைப்பில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு RM1,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதன் மூலம், சிலாங்கூரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களின் சேவையைப் பாராட்டப்படுவதாக அவர் தெரிவித்தார்.
“இந்த ஊக்கத்தொகை, முதலமைச்சர் அலுவலகம் மூலம், Yayasan MBI உடன் இணைந்து, ஹரிராயாவுக்கு முன் வழங்கப்படும்,” என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 28, 2026, 8:28 pm
நாட்டின் தேசிய ஹாக்கி வீரர் ஆர்.ராமகிருஷ்ணன் காலமானார்
February 28, 2026, 8:02 pm
உள்ளூர் ஓவியக் கலைஞர்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 28, 2026, 4:53 pm
நோன்பாளிகளின் சேவையில் குறைபாடு: TTDI அத்-தக்வா பள்ளிவாசல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது
February 28, 2026, 4:49 pm
புக்கிட் அமான் போலீஸ் அதிகாரி விபத்தில் உயிரிழந்தார்
February 28, 2026, 2:47 pm
வான்வெளியில் ஆபத்து அதிகரித்ததால் மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பி விடப்பட்டன
February 28, 2026, 1:30 pm
மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்
February 28, 2026, 1:25 pm
