நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிக்டாக் நட்பு கொடூரமாக மாறியது: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டு சிறை

கோத்தா கினபாலு:

கடந்த ஆண்டு, டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான குறைந்த வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, திமோர்-லெஸ்தேவைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு பிரம்படியும் விதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, 30 வயதுடைய ரஃபினஸ் படா டுகாங் என்பவருக்கு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிமோனிகா லின்சுவா தண்டனை விதித்தார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 376(2)(d)ன் கீழ் அவருக்கு 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்பட்டது.

ரஃபினஸ் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், தண்டனை முடிந்த பின் தேசிய குடிநுழைவு (JIM) துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 7 அன்று, ஒருவர் தனது மகள் டிசம்பர் 6 முதல் காணாமல் போனதாக போலிஸில் புகார் அளித்தார். அந்தச் சிறுமி, டிக்டாக் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பு அறிமுகமான குற்றவாளியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாகக் கூறப்பட்டது.

15 வயதுடைய அந்தப் பாதிக்கப்பட்ட சிறுமி,  குற்றவாளியின் வாடகை அறையில், டிசம்பர் 7 அன்று மாலை சுமார் 7 மணியளவில் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தனது தந்தையிடம் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset