செய்திகள் மலேசியா
நோன்பாளிகளின் சேவையில் குறைபாடு: TTDI அத்-தக்வா பள்ளிவாசல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது
கோலாலம்பூர்:
தொழுகைக்கு வரும் தொழுகையாளிகளுக்கு வழங்கப்படும் சேவையில் குறைபாடு இருந்ததாகச் சமூக வலைதளங்களில் எழுந்த நெட்டிசன்களின் புகாரின் அடிப்படையில் தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் அமைந்துள்ள அத்-தக்வா பள்ளிவாசல் நிர்வாகம் குற்றச்சாட்டுகளைக் கண்டறிந்து விசாரணை நடத்தவுள்ளதாக பதிவிட்டுள்ளது.
அதே பதிவில், முன்பு நிகழ்ந்த சம்பவங்களால் அந்நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
“எந்தவித தவறுகள் நடந்திருந்தாலும், பள்ளிவாசல் அவ்வகையில் மன்னிப்பு கோருகிறது.
“எல்லோரின் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி,” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இப்தார் விழா புறக்கணிப்பு காரணமாக வழிபாட்டாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுவதை TTDI அத்-தக்வா பள்ளிவாசல் நிர்வாகம் மறுத்துள்ளது. பள்ளிவாசலுக்குள் இருந்த இப்தார் அறை காலியாக இருப்பதைக் காட்டும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உணவுப் பொட்டலங்கள் பாய்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இது தவறான குற்றச்சாட்டு என்றும் கடந்த ரமலான் தொடக்கம் சுமார் 800 முதல் 1,000 பேர் வரை நோன்பு திறக்க பள்ளிவாசலுக்கு வந்துள்ளதாக பள்ளிவாசல் தலைவர் டத்தோ முஹம்மத் ஃபாஸ்லி யூசோப் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் பரவி உள்ள வெறுமை புகைப்படங்கள் உண்மையல்ல. பெரும்பாலான நோன்பாளிகள் சுமார் 7 மணிக்கு பள்ளிவாசலை நிரப்ப தொடங்குகின்றனர் என்றார் அவர்.
மேலும், பள்ளிவாசல் நிர்வாகம் எந்தவொரு தொழுகையாளியையும் நிபந்தனையின்றி அனைவரையும் வரவேற்கிறது; எதிர்பாராத எண்ணிக்கையிலான அதிகரித்துவிடும் நோன்பாளிகளுக்கு கூடுதல் உணவு ஏற்பாடு செய்யப்படும் சூழ்நிலைகளும் உண்டாகிறது என்று அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 28, 2026, 8:28 pm
நாட்டின் தேசிய ஹாக்கி வீரர் ஆர்.ராமகிருஷ்ணன் காலமானார்
February 28, 2026, 8:02 pm
உள்ளூர் ஓவியக் கலைஞர்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 28, 2026, 4:49 pm
புக்கிட் அமான் போலீஸ் அதிகாரி விபத்தில் உயிரிழந்தார்
February 28, 2026, 4:47 pm
சிலாங்கூர் மாநில 72,850 அரசு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகை அறிவிப்பு
February 28, 2026, 2:47 pm
வான்வெளியில் ஆபத்து அதிகரித்ததால் மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பி விடப்பட்டன
February 28, 2026, 1:30 pm
மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்
February 28, 2026, 1:25 pm
