நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் 5,000 பேருக்கு ரமலான் உதவிகள் வழங்க எஹ்சான் வர்த்தக குழுமம் இலக்கு நிர்ணயித்துள்ளது: டத்தோ அப்துல் ஹமித்

பெட்டாலிங் ஜெயா:

இந்த ஆண்டு நாடு முழுவதும் 5,000 பேருக்கு ரமலான் உதவிகளை எஹ்சான் வர்த்தக குழுமம் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அக் குழுமத்தின் தலைவர் டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.

பெருநாள் காலங்களில் வசதிக் குறைந்த மக்களுக்கு உதவுவதை செல்வம் படைத்த அனைவரும் கடமையாக கொண்டிருக்க வேண்டும்.

இதன் வாயிலாக அம் மக்களும் மகிழ்ச்சியாக பெருநாளை கொண்டாடுவதற்கு வழிவகுக்கும்.

எஹ்சான் வர்த்தகக் குழுமத்தின் முயற்சியில் நாடு தழுவிய நிலையில் வசதிக் குறைந்த மக்களுக்கு பெருநாள் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கிம்மா கட்சியுடன் இணைந்து 6ஆவது ஆண்டாக  இந்த உதவிகள் வழங்கப்படுகிறது.

அதே வேளையில் கிம்மாவை தவிர்த்து பல அரசு சாரா இயக்கங்கள் உட்பட பலருடன் இணைந்து கிட்டத்தட்ட 5,000 பேருக்கு இந்த உதவிகள் வழங்கப்படும்.

ரமலான் அன்பளிப்பு பொருட்களோடு 150 ரிங்கிட் பண முடிப்பும் வழங்கப்படுகிறது.

வரும் காலங்களில் வசதிக் குறைந்த மக்களுக்கான உதவிகள் தொடரும்.
பெட்டாலிங் ஜெயா ஹஜ்ஜா சுபைடா பள்ளிவாசலில் நடந்த ரமலான் உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு பின் டத்தோ அப்துல் ஹமித் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

இந்த நிகழ்வில் கிம்மாவின் தேசியத் துணைத் தலைவர் ஹாரிஸ், சிலாங்கூர் மாநில  கிம்மா தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் வாஹித், நெகிரி மாநிலத் தலைவர் ஹுசைன் ஜமால் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset