நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸ் தீ விபத்துக்கு முன் பட்டாசு வெடிக்கப்பட்டது: மக்கள்

கோலாலம்பூர்:

செராஸ் தீ விபத்துக்கு முன் அங்கு யாரோ பட்டாசு வெடித்தனர் என்று அப் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

செராஸ் ஶ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பின் 17ஆவது மாடியில் நேற்று இரவு தீ விபத்து நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 6 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

இந்த சம்பவத்திற்கு முன் அக்குடியிருப்பு பகுதியில் யாரோ பட்டாசு வெடித்த சத்தம் கேட்டது.

இரவு 9.15 மணிக்கு இந்த வெடிச் சத்தம் கேட்டது என்று அக்குடியிருப்பின் 7ஆவது மாடியில் வசிக்கும் நூருல் அதிரா கூறினார்.

இந்த சத்தத்திற்கு பின் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு நிலைமை குழப்பமடைந்து மேலும் மோசமானது.

தீயணைப்பு படையினர் இங்கு வந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக போராடினார்கள்.

எங்களை காப்பாற்றிக் கொள்ள வீட்டில் இருந்து வெளியேறினோம் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset