நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசியலாக்க வேண்டாம்: ஜாஹித்

பாகான் டத்தோ:

நீதிமன்றத்தின் தீர்ப்பை யாரும் அரசிலாக்க வேண்டாம் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி வலியுறுத்தினார்.

கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்டச் சட்டம் (I) இன் கீழ் 16 குற்றங்களை கூட்டரசு நீதிமன்றத்தின் ரத்து  செய்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு கிளந்தான் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் விதிகளுடன் தொடர்புடையது.

அதே வேளையில் இந்த சட்டம் ஷரியா நீதிமன்றத்திற்கு அல்ல.

ஷரியா சட்டத்தை வலுப்படுத்துவதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்படலாம். அதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். பிரச்சினைகளை எதிர்கொள்ள விவாதங்கள் நடத்தலாம்.

ஆனால் அரசியலை பிரதானமாக ஆக்காமல் யோசனைகளைத் தீர்மானிக்கும் பிரச்சினையை நாம் கையாள வேண்டும் என்று ஜாஹித் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset