நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதலாளிகள் வராததால் KLIA விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் இந்திய தொழிலாளர்கள்

கோலாலம்பூர்:

முதலாளிகள் வராததால் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் விமான நிலையத்தில் சிக்கி தவித்தனர்.

மலேசியாவில் பணிபுரியும் நோக்கில் இந்தியாவைச் சேர்ந்த 33 -தொழிலாளர்கள் நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தனர்.

ஆனால் அவர்களை அழைத்துச் செல்ல முதலாளி வராததால் அவர்களின் கனவு நிறைவேறாமல் போய் உள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் முதலாளி தனது ஊழியர்களை அழைத்து வர வராதது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த ஜனவரி 14ஆம் தேதி இதே போன்று இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் மலேசிய வந்தனர்.

இங்குள்ள தளவாடப் பொருட்கள் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக வந்து ஏமாந்துள்ளனர்.

இதனால் சொந்த பணத்தை பயன்படுத்தி அவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர்.

அதன் பின் சம்பந்தப்பட்ட 33 தொழிலாளர்களும் மீண்டும் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இம்முறையும் அவர்களை அழைத்து செல்ல முதலாளிகள் வரவில்லை என்று மலேசிய கினி செய்தி வெளியிட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset