நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிராகன் ஆண்டு கொண்டாட்டங்களுடன் தொடங்கியது 

கோலாலம்பூர்:

சீன புத்தாண்டு இன்று வெகு சிறப்பாக தொடங்கி உள்ளது. மிக முக்கிய விழாவாக சீனாவில் கருதப்படும் இந்த புத்தாண்டு விடுமுறை நாளில் சீன மக்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களோடு இணைந்து கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.

சீனர்கள் அதிகம் வாழும் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங்  போன்ற நாடுகளில் இது வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சீன நம்பிக்கையின் அடிப்படையில் 12 விலங்குகள்- ஆண்டுகளின் பெயராக ஒவ்வோர் ஆண்டும் மாறும். 

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு சீனப்புத்தாண்டு டிராகன் ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

2024 the year to focus on economic development, Malaysia to regain respect  – PM

சீன மக்கள் இந்தாண்டில் குழந்தைகளைப் பெற்றுகொள்ள விரும்புவர். டிராகன் போலவே பலம், ஆற்றல், வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.

சீனாவின் வசந்த கால தொடக்க நாளான புத்தாண்டு, சீனாவில் மட்டுமல்லாமல் ஹாங்காங், தென்கொரியா, வியட்நாம், மியான்மர், இந்திய தர்மாசாலாவில் உள்ள திபெத் துறவிகள் வரை கொண்டாடப்படும்.

Celebrating the Lunar Chinese New Year 2024 in Singapore

மலேசியாவில் புத்தாண்டிற்கு முதல் நாள் தங்களது பெற்றோரை காண மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக புறப்பட்டு சென்றுவிட்டனர். 

அரசாங்கம் அவர்களது கொண்டாட்டத்திற்கு உதவும் வகையில் இரண்டு நாட்கள் சாலை கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அறிவித்தது. பிரதமரும் அமைச்சர்களும் சீனத் தலைவர்களின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு அவர்களது மகிழ்ச்சியில் பங்கெடுத்து வருகின்றனர். 

Lunar New Year 2024 in Singapore - Dates

தங்கள் சீன நண்பர்களின் இல்லங்களுக்கு செல்வதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றார்கள்.

நாட்டின் பெரும்பாலான வணிக வளாகங்கள் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு முதல் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை வரவேற்றார்கள் 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset