நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் பயன் பெறும் நோக்கில் மருத்துவமனை கட்டும் இராஜகிரி ஜமாஅத்தின் முயற்சி மகத்தானது: டத்தோஶ்ரீ இக்பால்

கோலாலம்பூர்:

தங்கள் ஊர் மட்டுமல்லாமல் அக்கம் பக்கம் வாழும் மக்கள் பயன் பெறும் நோக்கில் மருத்துவமனை கட்டும் இராஜகிரி ஜமாஅத்தின் முயற்சி மகத்தானது என்று நம்பிக்கை குழுமத்தின் தலைவரும் இஸ்லாமிய கல்வி வாரியத்தின் தலைவருமான டத்தோஶ்ரீ முஹம்மது இக்பால் கூறினார்.

இராஜகிரி ஜமாஅத்தின் தலைவர் ஹாஜி என்ஏஎம் யூசுஃப் அலி தலைமையில் சிறப்பு குழுவினர் மலேசியாவுக்கு வந்துள்ளனர்.

நமது நாட்டில் வர்த்தகத்தில் கொடிக் கட்டி பறந்த ஹாஜி ஆர்.இ. முஹம்மது காசிம், டான்ஶ்ரீ உபைதுல்லா ஆகியோரின் வரலாறுகள் இன்னமும் இராஜகிரி சரித்திரத்தில் அழியாத அத்தியாயமாக உள்ளது.

இப்படி பல வரலாறுகளை கொண்ட இராஜகிரி வாழும் மக்கள் மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்து ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் பயன் பெறும் நோக்கில் மருத்துவமனை கட்டும் முயற்சியில் இராஜகிரி ஜமாஅத்தினர் இறங்கியுள்ளனர்.

அனைவருக்கும் கல்வி அவசியம் என்பதை நாம் தொடர்ந்து வருகிறோம்.

அதே வேளையில் பள்ளிவாசல், சூராவ்கள் கட்டும் போது அதில் மக்கள் வந்து தொழுகைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழுகைகளை மேற்கொள்ள மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

அவ்வகையில் மக்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் இராஜகிரி ஜமாஅத்தினர் எடுத்துள்ள இம்முயற்சிக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ முஹம்மது இக்பால் கூறினார்.

May be an image of 2 people and text

May be an image of 9 people, dais and text

இராஜகிரி ஜமாஅத்தினருடன் சிறப்பு சந்திப்புக் கூட்டம் நேற்று தலைநகரில் சைட் பிஸ்ட்ரோ மண்டபத்தில் நடைபெற்றது.

May be an image of 6 people, dais and text

May be an image of 12 people

எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் ஹமித், மிம்கோய்ன் தலைவர் டத்தோ ஜமருல் கான், குவாலிடாஸ் குழுமத்தின் தலைவர் டத்தோ டாக்டர் நூருல் அமின், ஈமான் கட்சியின் தலைவர் டத்தோ முஹம்மது மோசின், பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி, புக்கிட் ரோத்தான் அன் நூரியா பள்ளிவாசல் தலைவர் டத்தோ காசிம் அலியா, டத்தோஸ்ரீ ஷேக் அக்மல், டத்தோ டாக்டர் ஷேக் அமீன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

முன்னதாக மஸ்ஜித் இந்தியா இமாம் மௌலவி அல் ஹாபிஸ் செய்யது இப்ராஹிமின் இறைவேட்டலுடன் நிகழ்ச்சி துவங்கியது. முஹம்மது ரிஸ்வான் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset