நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிளுக்கான சிறப்பு ஓப்ஸ் நடவடிக்கையில் 143 சம்மன்கள் வழங்கப்பட்டன

பட்டர்வர்த்:

பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) பல்வேறு குற்றங்களுக்காக 143 சம்மன்களை வழங்கியுள்ளது.

மேலும், இந்தச் சிறப்பு ஓப்ஸ் நடவடிக்கையின் மூலம் வடக்கு திசையிலுள்ள சுங்கை துவா டோல் சாவடியில் மூன்று மோட்டார் சைக்கிள்களையும் ஜேபிஜே நேற்று பறிமுதல் செய்தது.

நேற்று, பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி நான்கு மணிநேர நடவடிக்கையில் பினாங்கின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையும் மாநிலத்தின் சுற்றுச்சூழல் துறையும்  இணைந்து மேற்கொண்டன என்று பினாங்கு ஜேபிஜே இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

மற்ற வாகனங்களின் பதிவு எண், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, காலாவதியான மோட்டார் வாகன உரிமம் காப்பீடு இல்லாதது, அனுமதிக்கப்பட்ட விவரக்குறிப்புகளின்படி பதிவு எண்ணைக் காட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 143 சம்மன் நோட்டீஸை ஜேபிஜே வெளியிட்டது.

இதற்கிடையில்,  இன்று அதிகாலை நடத்தப்பட்ட ஓப்ஸ் சம்சேங் ஜாலான் நடவடிக்கையில் பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக 67 சம்மன்கள் வெளியிடப்பட்டதாக தென்மேற்கு காவல்துறைத் தலைவர் கமாருல் ரிசால் ஜெனால் கூறினார்.

நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பாயான் லெபாசைச் சுற்றி நடத்தப்பட்ட நடவடிக்கையில், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 64 (1) இன் கீழ் ஒரு மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

மேலும், இந்த நடவடிக்கை ஒவ்வொரு வாரமும் தொடரும் என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset