நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளானில் 3 வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 1,502 பேர் கைது

கோலாலம்பூர்:

கிள்ளானின் கடந்த 3 வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளில் 1,502 பேர் கைது செய்யப்பட்டனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறை இயக்குநர் டத்தோஶ்ரீ முஹம்மத் சுஹைலி கூறினார்.

பல்வேறு குற்றங்கள் தொடர்பான பொதுமக்களின் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

வடக்கு, தெற்கு கிள்ளான் முழுவதும் குண்டர் கும்பல் நடவடிக்கைகள், கட்டுமான தளங்கள் மீதான சோதனைகள், போதைப்பொருள் குகைகள், கடத்தல் பொருட்கள், பயன்படுத்தப்படும் பொருட்கள் வளாகங்கள், சட்டவிரோத குடியேற்றங்கள், சூதாட்டக் கூடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான சோதனைகள் நடத்தப்பட்டது.

காவல்துறையைச் சேர்ந்த 283 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது கிட்டத்தட்ட 1,502 பேர் பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக இந்த சோதனையில் பாகிஸ்தான், நேப்பாளம், வங்காளதேசம், இந்தோனேசியா, இலங்கை, வியட்நாம், இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset