நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சேமிப்பு கணக்கில் பணம் காணாமல் போனதற்கும் பாடு தளத்திற்கும் தொடர்பு இல்லை: காவல்துறை விளக்கம்

கோலா திரெங்கானு:

டூங்குனில் பல தனிநபர்களின் வங்கிச் சேமிப்பு கணக்குகளிலிருந்து பணம் காணாமல் போனதற்கு பாடு எனப்படும் முதன்மை தரவு தளத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பணமோசடி கும்பலின் செயலால்தான் வங்கிச் சேமிப்பு கணக்குகளிலிருந்து பணம் காணாமல் போனதாக திரெங்கானு காவல்துறை தலைவர் ர் டத்தோ மஸ்லி மஸ்லான் கூறினார்.

தாபோங் ஹஜி, இஸ்லாம் வங்கிக் கணக்குகள் மூலம் பணம் பிடித்தம் செய்யப்பட்டது போல் பாதிக்கப்பட்டவர்களின் கூறுகள் இருப்பதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் இஸ்லாம் வங்கி அல்லது தபோங் ஹஜி மூலம் தவறான இணைப்பைக் கிளிக் செய்தால், மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாமல் கடவுச்சொல்லைக் கண்டறிந்து பணத்தைத் திருட இயலும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டூங்குனில் சில தனிநபர்கள் பாடு முதன்மை தரவு தளத்தில் இணைக்கப்பட்டதன் மூலம் வங்கிக் கணக்கில் பணத்தை இழந்ததாக சமூக ஊடகங்கள் மூலம் பரவியக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset