
செய்திகள் இந்தியா
முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்: அம்னெஸ்டி இண்டர்நேஷனல்
புது டெல்லி:
இந்தியாவில் முஸ்லிம்களின் வீடுகள் சட்டவிரோதமாக இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைகளில், இந்தியாவின் 5 மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு பிரசாரத்துக்கு முஸ்லிம்களின் சொத்துகள் இடிக்கப்படுகிறது.
இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பான தண்டனை வடிவில், முஸ்லிம்களின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் நிறுத்த வேண்டும். இது சட்டத்துக்கு மேல்பட்ட தண்டனையாகும்.
வீடு உள்ளிட்ட சொத்துகள் இடிக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் பொதுச் செயலர் ஏக்னெஸ் கேலமார்ட் தெரிவிக்கையில், இந்திய அதிகாரிகளால் முஸ்லிம்களின் சொத்துகள் சட்டவிரோதமாக இடிக்கப்படுவதை புல்டோசர் நீதி என்று அரசியல் தலைவர்களும், ஊடகமும் தெரிவிக்கின்றன.
ஆனால் அந்த நடவடிக்கை குரூரமானது; அதிர்ச்சிகரமானது. இத்தகைய நடவடிக்கையால் முஸ்லிம் குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 6:10 pm
பாலியல் பலாத்காரம் செய்து கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?
July 18, 2025, 4:39 pm
ராபர்ட் வதேரா மீது முதல் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல்
July 18, 2025, 4:35 pm
தமிழகத்தை தொடர்ந்து பிகாரிலும் இலவச மின்சாரம்
July 18, 2025, 1:47 pm
தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்குகளை ரத்து செய்தது தில்லி உயர்நீதிமன்றம்
July 18, 2025, 10:30 am
விமான விபத்துக்குப் பின் – எரிபொருள் கட்டுப்பாட்டு முறைகள் சீராகவே செயல்படுகின்றன: ஏர் இந்தியா
July 17, 2025, 8:36 pm
நடுவானில் என்ஜின் செயலிழப்பு: இண்டிகோ அவசர தரையிறக்கம்
July 17, 2025, 10:23 am
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
July 17, 2025, 9:46 am
ஏர் இந்தியா விமான விபத்து: தலைமை விமானி செய்த தவறா?
July 16, 2025, 5:54 pm