நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொத்துகளை அறிவிக்க 30 நாள்கள் உண்டு: எம்ஏசிசிக்கு மகாதீர் மகன்கள் நினைவூட்டல்

கோலாலம்பூர்:

எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் சொத்து விவரங்களை அறிவிக்க 30 நாள்கள் கெடு இன்னும் உள்ளது என்பதை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் மகன்கள் எம்ஏசிசிக்கு நினைவூட்டியுள்ளனர்.

மகாதீர் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் 1981ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான சொத்து பட்டியலை வெளியிட எம்ஏசிசி பணித்துள்ளது என்பதைத் தங்களது வழக்கறிஞர் மூலம் மகாதீரின் மகன்களான மிர்சான், மொக்ஸானி ஓர் அறிக்கையின் வாயிலாகக் கூறியுள்ளனர்.

கிடைக்கும் தகவல்களைத் தொகுக்கும் செயல்பாட்டில் தங்களுக்கு உதவுவதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"43 ஆண்டு மதிப்பிலான தகவல்களைத் தொகுப்பதில் உள்ள பணி சாத்திய முயற்சியாகும். இருப்பினும் எம்ஏசிசியின் கோரிக்கையை நிறைவேற்றப் பொறுமை, அதோடு புரிதல் மிக அவசியம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

எந்தவொரு தவறான சித்தரிப்பு அல்லது முன்முடிவைத் தவிர்க்க இந்த வழக்கில் கருத்து தெரிவிக்கும் போது, அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அவசியமென்பதையும் அவர்கள் கூட்டறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

முன்னதாகக் கடந்த செவ்வாய்க்கிழமையன்று எம்ஏசிசி தலைவர் ஆசம் பாக்கி, எம்ஏசிசி சட்டம் 2009இன் கீழ் அறிக்கை அனுப்பப்பட்ட போதிலும் மகாதீரின் மகன்களான மிர்சான், மொக்ஸானி இன்னும் தங்கள் சொத்துப் பட்டியலை சமர்ப்பிக்கவில்லை என்று கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது.

எம்ஏசிசி சட்டம் 2009இன் கீழ் அறிக்கை அனுப்பப்பட்டவர்கள் 30 நாள்களுக்குள் தங்கள் வசம் உள்ள அசையும், அசையா சொத்துகள் அனைத்தையும் அறிவிக்க வேண்டும்.

இதனிடையே 30 நாட்கள் கால அவகாசம் முடிந்த பிறகும் இந்த மாதத்தின் மத்தியில் தங்கள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க மிர்சானும் மொக்ஸானியும் கால நீட்டிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம் என்பதையும் அசாம் சுட்டிக் காட்டியிருந்தார்.

இதற்கிடையில், எம்ஏசிசி சட்டம் மற்றும் பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி, சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 2001 (ஆம்லா) ஆகியவற்றின் கீழ் மொக்ஸானி விசாரிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset