நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1.3 மில்லியன் ரிங்கிட்டுக்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த தலைமையாசிரியர் கைது

கோல திரெங்கானு:

விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உணவு, பானங்கள் வழங்குவதற்காக  1.3 மில்லியன் ரிங்கிட் தொகையை பெறுவதற்கு போலி ஆவணங்களை சமர்பித்த  தலைமை ஆசிரியை ஒருவர் ஆறு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

46 வயதுடைய அத்தலைமையாசிரியர் விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் நீதிமன்ற மூத்த உதவி பதிவாளர் யுஹைனிஸ் ரோஸ்லான் பிறப்பித்தார்.

மேலும் தவறான விவரங்களைக் கொண்ட ஆவணங்களை வழங்கியதற்காக, 

34 வயதுடைய ஒரு நிறுவன மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர், அதே வழக்கின் மேல் விசாரணைக்காக இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

கடந்த 2022 முதல் 2023 வரை 100 மாணவர்களுக்கான  ஒப்பந்தத்தில் 1.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு பேரை எம்ஏசிசி கைது செய்ததாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset