நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீரின் இரு மகன்கள் இன்னும் சொத்து விபரங்களை வெளியிடவில்லை 

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் இரு மகன்களும்  இதுவரை எந்தவொரு சொத்து விபரங்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சமர்பிக்கவில்லை என்று எம்.ஏ.சி.சியின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

ஆனால், கடந்த மாதம் மிர்ஸான், மொக்ஸானிக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது. இந்த நோட்டீஸ் 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் செக்‌ஷன் 36யின் கீழ் வழங்கப்பட்டது. 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட இருவரும் சொத்து விபரங்களைச் சமர்பிக்கவில்லை என்றால் சொத்து விபரங்களை வெளியிடாததற்காக அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று அஸாம் பாக்கி திட்டவட்டமாக தெரிவித்தார். 

இந்த வழக்கு விசாரணையின் ஓர் அங்கமாக சொத்து விபரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என்பதாகும் என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். 

மிர்ஸான் இன்னும் 30 நாட்களில் தங்களின் சொத்து விபரங்களை எம்.ஏ.சி.சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி 18ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆணையம் கேட்டுக்கொண்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset