நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாயிப்பை முழுமையாக கவனித்து கொள்ள விரும்புகிறேன்; வீண் குற்றச்சாட்டுகள் வேண்டாம்: ராகத் குர்தி

கூச்சிங்:

தாயிப் விவகாரத்தில் என் மீது வீண் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

என் கணவரை முழுமையாக கவனித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று ரகாத் குர்தி கூறினார்.

சரவா மாநில முன்னாள் ஆளூநர் துன் தாயிப் மஹ்மூத் கடத்தப்பட்டதாக கூறி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில் மருத்துவரின் அனுமதியின்றி என் கணவரை மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.

தாயிப்பின் முன்னாள் மனைவி என எனது நற்பெயரை கெடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் படங்கள், செய்திகள் பரவி வருகின்றன.

எனது கணவர் துன் தாயிஃப்பின் உடல் நலம் தான் இப்போது எனக்கு முக்கியம்.

எனக்கு எதிரான அனைத்து  குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் இந்த நேரத்தில் எனது முன்னுரிமை என் கணவரைக் கவனித்துக்கொள்வது மட்டுமே.

எனக்கு எதிராக கூறப்படும் வதந்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வெளிநாட்டில் பிறந்தாலும் தற்போது மலேசியராக உள்ளதாகவும் தொடர்ந்து மலேசியராக இருப்பேன் என்றும் ரகாத் கூறினார்.

நான் இந்த நாட்டை விட்டு வெளியேறமாட்டேன்.

துன் தாயிப் உடல் நலம் திரும்பிய பிறகு, சரவா மக்களுக்கான எனது நலப் பணிகளைத் தொடருவேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset