நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜெய்ன் ரயான் கொலை வழக்குத் தொடர்பில் தகவல் கொடுப்பவர்களுக்கு 20,000 வெள்ளி சன்மானம் வழங்கப்படும்: ஏ.தெய்வீகன்

ஷா ஆலம்: 

ஜெய்ன் ரயானின் கொலை தொடர்பில் சந்தேக நபர் குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்கு 20,000 வெள்ளி சன்மானம் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநிலக் குற்றத் தடுப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் வரை சந்தேக நபரைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவல்களைக் கொடுத்து உதவி செய்பவர்களுக்கு 20,000 வெள்ளி சன்மானம் வழங்கப்படும் ன்று சிலாங்கூர் மாநிலக் குற்றத் தடுப்பு அறக்கட்டளையின் துணை தலைவர் ஏ.தெய்வீகன் கூறினார். 

இந்தச் சன்மானம் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைமையகத்தின் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் சந்தேக நபரை அடையாளம் காண்பதில் காவல்துறைக்கு இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஓமார் கான் தெரிவித்துள்ளார். 

ஜெய்ன் ராயன் என்ற ஆறு வயது ஆட்டிசம் சிறுவன் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மதியம் காணாமல் போனது. 

மறுநாள் அவர் தனது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள ஆற்றின் அருகே கழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். 

பிரேதப் பரிசோதனையில் சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து வழக்கு திடீர் மரணத்திலிருந்து கொலை என மறுவகைப்படுத்தப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset