நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப்  பயன்படுத்தும் மிளகாய் தோட்டத்திற்கு அமைச்சர் கோபிந்த் சிங் வருகை 

கிள்ளான்:

சிலாங்கூர் கிள்ளானில் ஒரு மிளகாய் பயிரிடும் தோட்டத்திற்கு இலக்கவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும், அது எவ்வாறு உற்பத்தி, வாழ்வாதாரத்தை நேரடியாகப் பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது என்பதை  பார்க்க சென்றதாக இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
 
இது பெமங்கின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாய வணிகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்த முயற்சியானது சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களின் ஆதரவுடன் மைடேக்கில் இயக்கப்படுகிறது.

வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சால்   அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட மைடேக் விவசாயத் துறைக்கான தேசிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வாயிலாக நவம்பர் 2022 முதல் 500 க்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கியுள்ளது. 

இதில்  28,000 ஆக்தேக் பங்கேற்பாளர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது.

ஒரு ஏக்கருக்கு ஒரு அறுவடைக்கு 2,000 கிலோவுக்கு மேல் உற்பத்தித் திறன் அதிகரிப்பு, ஒரு ஏக்கருக்கு ஒரு விவசாயிக்கு 2,000 ரிங்கிட்டுக்கு மேல் கூடுதல் மாத வருமானம் மற்றும் ஒரு ஏக்கருக்கு அறுவடைக்கு 3,000 ரிங்கிட்டுக்கு மேல் இயக்கச் செலவு குறைப்பு இதில் அடங்கும்.

விவசாயத் தொழிலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. 

அக்ரோ வங்கி நிதியுதவி ஆதரவுடன் இணைந்து, நுண் நிதியளிப்பு விண்ணப்பங்களை அணுகுவதற்கும் செயலாக்குவதற்கும் உதவுவதுடன், விவசாயத் துறையின் வாய்ப்புகள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset