நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமான் பாலஸ்தீன் வங்கி கணக்கு முடக்கப்பட்ட விவகாரம்; பிப்ரவரி 27ஆம் தேதி வழக்கு விசாரணை செவிமெடுக்கப்படுகிறது

கோலாலம்பூர்:

அமான் பாலஸ்தீன் வங்கி கணக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சியால் முடக்கப்பட்டது. இதனை எதிர்த்து அமான் பாலஸ்தீன் தரப்பு ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கைக்கான சட்ட மறுமதிப்பீடு செய்ய நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தது. 

இந்த விண்ணப்பமானது கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் எதிர்வரும் பிப்ரவரி 27ஆம் தேதி செவிமெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நீதிபதி அமர்ஜீத் சிங் இந்த தேதியை நிர்ணயித்தார். 

இந்நிலையில் இந்த விண்ணப்பத்தை உடனடியாக நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று அமான் பாலஸ்தீன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ரஃபிக் ரஷித் இவ்வாறு தெரிவித்தார். 

கடந்தாண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அமான் பாலஸ்தீன் எனும் தொண்டூழிய நிறுவனத்தின் வங்கி கணக்குகளை அதிரடியாக முடக்கியது. 70 மில்லியன் ரிங்கிட் நிதியானது தவறாக பயன்படுத்தப்பட்டதாக வெளிவந்த குற்றச்சாட்டு தொடர்பில் எம்.ஏ.சி.சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. 

அத்துடன், 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டத்தின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.ஏ.சி.சி தெரிவித்தது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset