நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறைச்சாலை சட்டத்தின் கீழ் நஜீப்பை விடுவிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு: முன்னாள் நீதிபதி

கோலாலம்பூர்:

சிறைச்சாலை சட்டத்தின் கீழ் நஜீப்பை விடுவிக்க அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று முன்னாள் நீதிபதி ஹமீத் சுல்தான் அபு பாக்கார் கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் மன்னிப்பு வாரியம் முழு அரச மன்னிப்பு வழங்கவில்லை.

அதற்கு பதிலாக அவரின் தண்டனை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் சிறைச்சாலைச் சட்டம் 1955இன் விதியின்படி நஜீப் ரசாக்கை சிறையில் இருந்து விடுவிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.

சட்டத்தில் எந்தவொரு கைதியையும் விடுவிக்க அனுமதிக்கிறது. ஆனால் அமைச்சர்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.

சிறைகள் உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் உரிமத்தில் நஜீப்பை விடுவிக்க அரசாங்கம் விரும்பினால், அவர்கள் அதை வெகு காலத்திற்கு முன்பே செய்திருக்க முடியும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset