நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியா ஏற்றுமதியை கட்டுப்படுத்தினாலும் நாட்டில் வெங்காயம் போதுமான அளவு உள்ளது: மாட் சாபு

புத்ராஜெயா:

இந்தியா ஏற்றுமதியை கட்டுப்படுத்தினாலும் நாட்டில் வெங்காயம் போதுமான அளவு உள்ளது.

விவசாயம், உணவு பாதுபாப்புத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் சாபு இதனை உறுதிப்படுத்தினார்.

இந்தியாவின் வெங்காய ஏற்றுமதிக்கான தடை தற்காலிகமானது.

இருந்தாலும் நாட்டில் வெங்காயம் எப்போதும் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக சீனா, தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக வெங்காயம் வரத்து இல்லாததால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

விலை மட்டுமே ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த வெங்காயக் கட்டுப்பாடு அரிசியைப் போலவே தற்காலிகமானது.

அன்று நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் போது, ​​அவர்கள் 170,000 மெட்ரிக் டன்களை மலேசியாவிற்கு விற்கத் தயாராக உள்ளனர்.

விரைவில் இந்தியாவில் தேர்தல் நடக்கவிருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியிருக்கலாம்.

அதன் பிறகு அவர்கள் மீண்டும் ஏற்றுமதி செய்வார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset