நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் விவகாரத்தில் சொந்த கூட்டணியினரை  சாடுவது அநாகரீகம்: ஜாஹித்

கோலாலம்பூர்:

நஜீப் விவகாரத்தில் சொந்த கூட்டணியினரையே சாடுவது அநாகரீகம் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கப்படவில்லை.

அதற்கு பதிலாக அவரின் தண்டனைகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் ஒரே கூட்டணியில் இருந்துக் கொண்டு ஒருவரைக் கொருவர் சாடிக் கொள்வது அநாகரீகம்.

அம்னோவிலும் ஒரு சிலர் இதுபோன்று சாடலாம். அதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால் இது அம்னோவின் அதிகாரப்பூர்வமான கருத்து அல்ல.

காரணம் இது ஒரு முக்கிய பதவியில் இருப்பவரால் வெளியிடப்படவில்லை.

ஆகவே சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்களை வாபஸ் பெறவும், அவர்களின் பதிவுகளை நீக்கவும், கவனக்குறைவுக்கு மன்னிப்பு கேட்கவும் கட்சித் தலைவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இது நிலைமையை எளிதாக்கும் என நம்புகிறேன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset