நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்எஸ்எம்இகளுக்கான திட்டங்களை ஒருங்கிணைக்க சிறப்பு செயலகம்: ஜாஹித்

புத்ராஜெயா:

எம்எஸ்எம்இகளுக்கான திட்டங்களை ஒருங்கிணைக்க சிறப்பு செயலகம் விரைவில் அமைக்கப்படும்.

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) தொடர்பான திட்டங்கள் முறையாக அவர்களை சென்றடைய வேண்டும்.

கிட்டத்தட்ட 16 அமைச்சுகள், 50 ஏஜென்சிகள் இந்த எம்எஸ்எம்இகளுக்கான திட்டங்களை கொண்டிருப்பது கண்டறிப்பட்டு உள்ளது.

ஆகவே இவை அனைத்தும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் சிறப்பு செயலகம் ஒன்றை அமைக்க நான் அறிவுறுத்தி உள்ளேன்.

பெர்டானா புத்ராவில் நடந்த 2030 எம்எஸ்எம்இகளுக்கான தூரநோக்கு திட்டத்தை தொடக்கி வைத்த பின் துணைப் பிரதமர் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் தொழில் முனைவோர் மேம்ம்பாடு கூட்டுறவு அமைச்சர் டத்தோ இவான் பெனடிக், துணையமைச்சர் டத்தோ ரமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset