நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் அரசின் பெருநாள் பற்றுச்சீட்டு; மக்களின் சுமையை குறைக்கும்: பாப்பாராய்டு

பந்திங்:

சிலாங்கூர் அரசின் பெருநாள் பற்றுச்சீட்டு திட்டம் மக்களின் சுமையை குறைக்கும் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு கூறினார்.

பெருநாள் பற்றுச்சீட்டு திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு அறிமுகம் செய்து அதன் வாயிலாக மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.

நோன்பு பெருநாள், சீனப் புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுகிறது.

வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும் நிதிச்சுமையை குறைக்கும் நோக்கில் தலா 200 ரிங்கிட் மதிப்பிலான இந்த பற்றுச் சீட்டுகள் தகுதி உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் எக்கோன்சேவ் பேரங்காடியில் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

அவ்வகையில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு பந்திங் சட்டமன்றத் தொகுதியிலுள்ள 400 சீனக் குடும்பங்களுக்குப்  இப்பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. 

இந்த பற்றுச்சீட்டுகள் இம்மக்களுக்கு பெரும் பயனாக அமைந்தது என்று பாப்பாராயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset