நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறார்களை குறிவைத்து வேப் பொருட்கள் விற்பனை; சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கும்: ஜுல்கிஃப்ளி அஹ்மத்

புத்ராஜெயா:

சிறார்களை குறிவைத்து வேப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்று அதன் அமைச்சர் ஜூல்கிப்ளி அஹ்மத் கூறினார்.

சிறார்களைக் குறிவைத்து சந்தையில் புதிய வேப் போன்ற பொருட்கள் விற்பனை குறித்து அமைச்சுக்கு புகார்கள் கிடைத்துள்ளது.

குறிப்பாக எனர்ஜி ஸ்டிக் என்று அழைக்கப்படும் இந்த சாதனத்தின் விற்பனை குறித்து இப் புகார்கள் கிடைத்துள்ளது.

இவ் விவகாரம் குறித்து சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநருக்கும் துணை இயக்குநருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகார்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது

இந்த புகார்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்
கல்லீரல் புற்றுநோய் விழிப்புணர்வு தின விழாவை தொடக்கி வைத்த பின்னர்  அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset