நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலர் பள்ளிகளை சீரமைக்க சிறப்பு குழு அமைக்கப்படும்: கல்வியமைச்சு 

நிபோங் திபால்:

பாலர் பள்ளிகளை சீரமைக்க கல்வியமைச்சு சிறப்பு குழுவை அமைக்கும் என்று அதன் அமைச்சர் ஃபாட்லினா சிடேக் கூறினார்.

கல்வித் திட்டம், பாலர் பள்ளி தொடர்பான சிக்கல்கள், கற்றல், பாடத்திட்டம் ஆகியவை அமைச்சின் கீழ் ஒருங்கிணைக்கப்படுவதை கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் கீழ் பாடத்திட்டம், பாலர் பள்ளி பிரச்சினைகள் இணக்கமாக இருப்பதை உறுதி செய்வதே அமைச்சின் திட்டமாகும்.

அதனால்தான் சமீபத்தில், ஒரு சிறப்பு பணிக்குழுக் கூட்டம்  அமைத்து அதில் இது குறித்து விவாதிக்கப்படும்.

இதன் வாயிலாக பாலர் பள்ளியின் சூழலில் நிகழும், வெற்றிகரமான முன்னேற்றங்கள் குறித்து அமைச்சு அவ்வப்போது அறிவிக்கும்.

அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பாலர் பள்ளி கல்வி முறையை மறுசீரமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதனால் பாலர் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்று அமைச்சர் ஃபாட்லினா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset