நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் புறப்பாட தரத்தை மேலும் மேம்படுத்த  தமிழாசிரியர்களுக்கு  சிறப்பு பயிற்சியை  ஏற்பாடுகள் செய்து வருவதாக ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறினார்.

நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளையும் , அதில் பயிலும் மாணவர்களின் வளர்ச்சிக்கு என்று காவலனாக ம.இ.கா. விளங்கும்.

இன்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி நிலை தொடர்ந்து வளரச்சிக்கண்டு வந்தாலும் எதிர் காலத்தில்  மாணவர்களின் கல்வி நிலையை் மேலும் மேம்படுத்த  ஆய்வினை ம.இ.கா மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

அது தொடர்பாக இந்தியவில் உள்ள் பல்கலைக் கழகங்களுடன் பேச்சுவார்ரதை நடத்தியுள்ளதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்

அதற்கு எம்.ஐ. இ.டி . நிறுவனம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது் என்று பேரா, கோலகங்சாரில்  சவுக்  எனும் இடத்தில் உள்ள கட்டித் தோட்டத் தமிழ்ப் பள்ளியில்  அருந்தமிழ் அரங்கத்தை திறந்து வைத்து ஆற்றிய உரையில் இவ்வாறு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பேசினார்.

இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகளில் மட்டும் அல்ல அதில் பயிலும் மாணவர்களின் கல்வி் மேம்பாட்டில் மஇகா என்றுமே அக்கரையுள் கட்சியாக விளங்கும் என்றும் நினைவுறுத்தினார்.

சீனம் மற்றும் தேசிய மொழி பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்திற்கு ஈடாக தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி தரம் அதிகரிக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்று  அவர் கூறினார்.

இப்பள்ளியில்  30 மாணவர்கள் கல்வி பயின்றாலும் அவர்களின் கல்வி வளர்ச்சி சிறப்பாக இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில. பள்ளி வளர்ச்சிக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், சொந்த நிதியாக 15 ஆயிரம் ரிங்கிட், எம்.ஐ.இ.டி. வழி  10 ஆயிரம் ரிங்கிட்  நிதியை விக்னேஸ்வரன் வழங்கினார்.

இங்கு இந்த மண்டபம் 2 லட்சத்து 35 ஆயிரம் வெள்ளி செலவில் நிர்மணிக்கப்பட்டது.

அதற்கு அரசாங்கம், பலரும் நிதி வழங்கி ஆதரவு வழங்கியுள்ளதாக பள்ளியின் வாரியக் குழுத் தலைவர் வி. சின்னராசு கூறினார்.

இந்த நிகழ்வில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் எடுத்துக் வழங்கியதுடன் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதியை வழங்கினார்.

இதில் மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset