நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் வர்த்தகர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்: டத்தோ ரமணன்

கோலாலம்பூர்:

நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் வர்த்தகர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.

மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனமான மிம்காய்ன் ஏற்பாடு செய்திருக்கும் சிறு நடுத்தர வர்த்தகர்கள் மாநாட்டை தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சி.

அதே வேளையில் இவ்விழாவில் உரையாற்றிய டத்தோஶ்ரீ இக்பால் பல கோரிக்கைகளை முன் வைத்தார்.

குறிப்பாக சிறு தொழில் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர் முன்வைத்தார்.

நாட்டின் ஆள்பலத் துறையில் சிறு நடுத்தர வர்த்தகர்கள் தான் 90 சதவீதமாக உள்ளனர்.

அதே வேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் 40 சதவீதத்தை கொண்டுள்ளனர்.

மேலும் 11 சதவீதம் ஏற்றுமதி சக்தியை அவர்கள் கொண்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கும் சிறு நடுத்தர வர்த்தகர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

குறிப்பாக, என்னுடைய அமைச்சின் கீழ் வாய்ப்புகள் முறையாக இந்த வணிகர்களைச் சென்றடையவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

எது எப்படி இருந்தாலும் இந்திய சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

அதன் வாயிலாக நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset