நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

21 புதிய தொழில் துறை வாய்ப்புகள் இந்திய சமுதாயம் பயன் பெற வேண்டும்: டத்தோஸ்ரீ இக்பால்

கோலாலம்பூர்:

அரசாங்கத்தின் 21  தொழில் துறை வாய்ப்புகளை இந்திய சமுதாயம் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோலாலம்பூர் பொருளாதார வர்த்தக மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் இதனை வலியுறுத்தினார்.

2030ஆம் ஆண்டுக்கான தொழில் துறை உருமாற்ற மாஸ்டர் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகம் செய்துள்ளார்.

இதில் 21 புதிய வர்த்தக தொழில் துறைகள் அறிமுகம் காணப்பட்டுள்ளது.

இந்த தொழில் துறைகள் அனைத்தும் பெரிய வர்த்தகர்களுக்கு அல்ல.  மாறாக சிறு நடுத்தர வர்த்தகர்களுக்கு பெரிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

ஆகவே, இவ்வாய்ப்புகளை இந்திய சமுதாயம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ இக்பால் கூறினார்.

 நாட்டில் உள்ள சிறு நடுத்தர வர்த்தகர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக, அசரசாங்கத்தின் திட்டங்கள் அவர்களை சென்றடைவது இல்லை. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுப்பது இல்லை என்பதுதான் இன்றைய நிலைமை.

ஆகவே, இந்தப் பிரச்சினைகளுக்கு துணையமைச்சர் டத்தோ ரமணன் தீர்வு காண வேண்டும்.

இதுவே எங்களின் கோரிக்கை என்று டத்தோஸ்ரீ இக்பால் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset