நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

36 வயதிலும் விளையாடக் கூடிய ஆட்டக்காரர்களுக்கே குடியுரிமை: எப்ஏஎம் விளக்கம்

பெட்டாலிங்ஜெயா:

36 வயதிலும் விளையாடக் கூடிய ஆட்டக்காரர்களுக்கே குடியுரிமை என்று எப்ஏஎம் எனப்படும் மலேசிய கால்பந்து சங்கம் கூறியுள்ளது.

மலேசிய ரத்தத்தை கொண்டிருக்கும் ஆட்டக்காரர்களுக்கு தேசிய அணியில் விளையாட அனுமதி வழங்கப்படுகிறது.

குறிப்பாக அவர்களுக்கு குடியுரிமையும் வழங்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூத்த வெளிநாட்டு கால்பந்து வீரர்களை இயல்பாக்குவது குறித்த விமர்சனங்களை மலேசிய கால்பந்து சங்கம்  நிராகரிக்கிறது.

அவர்களால் இன்னும் விளையாட முடியும் என்றால் அதில் என்ன தவறு என்று எப்ஏஎம் தலைமை செயலாளர் நூர் அஸ்மான் ரஹ்மான் கூறினார்.

மேலும் வெளிநாட்டு கால்பந்து வீரர்கள், உள்ளூர் லீக்கில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் விளையாடியிருக்க வேண்டும்.

அதன் வாயிலாகவே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset