நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூத்த ஆட்டக்காரர்களுக்கு குடியுரிமை ஏன்?: கைரி கேள்வி

கோலாலம்பூர்:

மூத்த ஆட்டக்காரர்களுக்கு குடியுரிமை வழங்குவதால் என்ன பயன் என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

மலேசியா ரத்தத்தை கொண்ட ஆட்டக்காரர்களுக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

அதே வேளையில் அந்த ஆட்டக்காரர்களுக்கு குடியுரிமையும் வழங்கப்படுகிறது.

ஆனால் வயது முதிர்ந்த கால்பந்து வீரர்களுக்கு குடியுரிமை வழங்குவது நியாயமற்றது.

தேசிய அணிக்கு வெளிநாட்டு வீரர்களை இயல்பாக்குவது என்ற மலேசிய கால்பந்து சங்கத்தின் கொள்கையாக உள்ளது.

இந்த விவகாரம் முன்னாள் தேசிய வீரர்கள், பொது மக்களிடமிருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று கைரி கூறினார்.

வயதான வெளிநாட்டு வீரர்களை இயல்பாக்குவது, தங்கள் குழந்தைகளின் குடியுரிமை உரிமைகளுக்காக நீண்டகாலமாக போராடி வரும் மலேசிய தாய்மார்களுக்கு பெரிய அவமானம்.

வெளிநாட்டு கால்பந்து வீரர்களுக்கு குடியுரிமையை அமைச்சரவையில் முன்மொழிய விண்ணப்பம் வந்தது என்னை மிகவும் வருத்தப்படுத்தியது.

மலேசியாவுக்காக விளையாடுவதற்கு 23 வயதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அவருக்கு வயது 36.

அவருக்கு குடியுரிமை வழங்கியது ஏன்?. அவர் தேசிய அணிக்காக விளையாட கூட தகுதியற்றவர் என்று கைரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset