நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹாடிக்கும் மொஹைதினுக்கும் இடையே பனிப்போரா?

கோலாலம்பூர்:

பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுக்கும் பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிற்கும் இடையேயான உறவுகள் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேசியக் கூட்டணியிம் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் இரு தலைவர்களும் முரண்பட்டதாக கூறப்படுகிறது.

பெர்சத்து கட்சித் தேர்தலில் மொஹைதின் தனது தனது பதவியை தற்காத்துக் கொள்ள யூடெர்ன் செய்ததைத் தொடர்ந்து உறவு பிரச்சினையாக மாறியது.

இது அடுத்த தேர்தலில் அதன் துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தாரை எதிர்க்கட்சியின் பிரதமர்வேட்பாளராக முன்னிறுத்த பாஸ் கட்சியின் திட்டங்களைத் தகர்த்து உள்ளது.

நவம்பரில் பெர்சத்து பொதுக் கூட்டத்தில் மொஹைதினின் திருப்பம், தேசியக் கூட்டணி தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதாகும்.

அதன்பின் அடுத்த பிரதமராக நியமிக்கப்படுவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சியாகக் காணப்பட்டது.

குறிப்பாக கடந்த அக்டோபரில் பாஸ் கூட்டத்திற்கு பிறகு மொஹைதினும், ஹாடியும் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதைக் காணவில்லை என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset