நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் இணக்கம் 

குவாந்தான்: 

கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் அடிக்கடி சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இதனை களையும் விதமாக அந்த நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படும். இதனால் அரசாங்கம் இந்த விவகாரத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பஹாங் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கூறினார். 

ப்ளாசா டோல் கோம்பாக் முதல் லிங்காரான் தெங்கா உத்தாமா பெந்தோங் வரை நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், புதியதொரு குகை சாலை ஒன்று அமைக்கப்படும் என்று அவர் கோடிக்காட்டினார். 

மாநில அரசாங்கமும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை நிர்மாணிப்பு நிறுவனங்களும் இணைந்து கலந்தாலோசனை கூட்டங்களை நடத்தியது. அதில், அதிகரித்து வரும் சாலை போக்குவரத்து சிக்கல்களைக் களைய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். 

ப்ளாசா டோல் கோம்பாக் முதல் ப்ளாசா டோல் பெந்தோங் வரை சுமார் 42 கிலோமீட்டர் தூரம் வரை சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை மாநில அரசாங்கம் அறிந்துள்ளது என்று அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset