நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நாட்டை சிறப்பாக வழிநடத்தினார் மாமன்னர்: பிரதமர்

கோலாலம்பூர்:

பல அரசியல் குழப்பங்களுக்கு மத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுதீன் பில்லா ஷா நாட்டை சிறப்பான முறையில் வழிநடத்தினார்.

இவ்வேளையில் அவருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நீண்ட கால அரசியல் உறுதியற்ற தன்மை, கோவிட்-19 தொற்று நோயின் பரவல், மாறிவரும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றில் நாடு சிக்கியது.

குறிப்பாக  நாடு நிச்சயமற்ற தன்மையிலும் நெருக்கடியிலும் தள்ளப்பட்டது.

எவ்வாறாயினும், எந்த சூழ்நிலையிலும் அமைதி,  நல்வாழ்வு முன்னுரிமையாக இருப்பதை உறுதிசெய்வதற்காக மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் உயர்ந்த குணங்களை உள்ளடக்கிய தலைமைத்துவத்தின் பொறுப்புகளை மாமன்னர் முழுமையாக நிறைவேற்றினார்.

சுல்தான் அப்துல்லாஹ்வின் பதவிக்காலம் நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறித்தது.

மூன்று பிரதமர்களின் மாற்றங்கள் மூலம் அரசாங்கம் சோதிக்கப்பட்டது. திறமையான தலைமைத்துவம், சாதாரண நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட தியாகம் தேவை என்றும் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset